ஒரு மணி துளி போதும்,
அவள் உன் மேல் காதல் கொள்ள
ஒரு மணி துளி போதும்,
அவளுக்கு உன் மேல் கோபம் எழ
ஒரு மணி துளி போதும்,
அவள் உன்னை புரிந்து கொள்ள
ஒரு மணி துளி போதும்,
அவள் உன்னை பிரிந்து செல்ல
ஒரு மணி துளி போதும்,
அவளை நீ கவர்ந்து அள்ள,
ஒரு மணி துளி போதும்,
அவள் உன்னை உதறி தள்ள
ஒரு மணி துளி போதும்,
உன் மடியில் அவள் விழ
ஒரு மணி துளி போதும்,
உன்னாலே அவள் அழ
இவை அனைத்தும் ஒரு மணி துளியில் சாத்தியம் என்னினும்,
அதனை முடிவு செய்வது மட்டும் அவள் என்பதே சத்தியம்!
No comments:
Post a Comment