இருண்ட உலகெனும் கரும்பலகையில் வெளிச்சம் வீசிய சாக் பீஸ்,
அது அக்கால கல்வி!
வெளுத்த பாலாடை பலகையில் கறுப்பு கோடிட்ட மார்க்கர்,
அது இக்கால கல்வி!
கல்வியே சிறந்த செல்வமென்று, கலைகள் பல கற்று தந்தது,
அக்கால கல்வி!
கல்வி கற்பதே செல்வம் சேர்க்கத்தான், என்று சொல்லாமல் சொல்லி தந்தது,
இக்கால கல்வி!
கற்றவர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு, என்று வாழ்த்தி பாடியது,
அக்கால கல்வி!
செல்லாத இடமில்லை, சென்றும் பயனிலை என வேளைக்கு திண்டாடுவது,
இக்கால கல்வி!
ஆங்காங்கே சிதறிய முத்துக்கள் போல எழுத்துப்பிழைகள் உண்டு. ஆயினும், வரிகள் அடிபட்டவனின் வலிகள் போல இருக்கிறது.
ReplyDelete